சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாக கனமழை பெய்துள்ளது.
தென்மேற்கு திசையில் அதிக அளவில் காற்று வீசுவதால் உருவான மேகங்களும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் சென்னையில் இரண்டாவது நாளாக மழை பெய்துள்ளது அண்ணாநகர், போரூர்,வடபழனி, ராமாபுரம், ,கிண்டி,அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுடியது வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இரண்டாவது நாளாக மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதேபோன்று சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம்,மேடவாக்கம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பூவிருந்தவல்லி, குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது.