Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 2-வது விமான நிலையம்…. அரசு போட்ட அதிரடி திட்டம்…. என்ன பிளான் தெரியுமா?….!!!!!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரனூர், பரந்தூர் ஆகிய இடங்களுக்கு விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஒரு இடத்தை தமிழக அரசு விரைவில் தேர்வு செய்ய உள்ளது. பயணம் செய்வோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதேசமயம் இரண்டாவது விமான நிலையம் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதியில் 50 சதவீத இடங்கள் அரசு நிலமாக உள்ளது. அதில் மீதமுள்ள 50 சதவீத நிலத்தை தனியாரிடமிருந்து அரசு கையகப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஐந்து ஏரிகள் உட்பட 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள், 2500குடியிருப்புகள் கையகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுபோன்ற செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |