சென்னையில் தொடர் கனமழை காரணமாக டெங்கு மற்றும் மலேரியா நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். வடகிழக்கு பருவமழை,வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. மாநகராட்சி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.தெருக்களில் தேங்கிய மழை நீரில் அதிக அளவு கொசு உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் சூழல் உள்ளது.
அதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைக்கிறார்.இந்த முகாம் மூலம் பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்க மாநகராட்சி சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் யாருக்காவது காய்ச்சல்,சளி மற்றும் இருமல் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது