Categories
மாநில செய்திகள்

சென்னையில் 2,100 பேருந்துகளில்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் முதற்கட்டமாக 2,100 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பேனிக் பட்டன் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பேருந்தின் உட்பகுதியில் 3 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், நான்கு இடங்களில் பேனிக் எனப்படும் அவசரகால அழைப்பான் பொருத்தப்படும் என்று கூறினார். பேனிக் பட்டனை அழுத்தியவுடன் பணிமனைக்கு சென்று சேர்ந்து காவல்துறையினர் உதவியுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |