சென்னை மாநகரின் முக்கியமான வர்த்தக/வணிக மையமாக பரபரப்பு குறையாமல் செயல்பட்டு வருவது பாரிமுனை .இங்கு ஏராளமான நிறுவனங்களின் அலுவலகங்களும், கடைகளும் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பகுதியில் பழமை வாய்ந்த கட்டிடங்களும் நிறைய உள்ளன. இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 256 கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது.
வடக்கு கோட்டை சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 256 கடைகள் ரூ.60 லட்சம் வாடகை நிலுவை வைத்துள்ளதை அடுத்து சீல் வைத்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.