தேர்தலையொட்டி சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தேர்தலையொட்டி சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் 6ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதி டாஸ்மாக் கடைகள், பார்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.