Categories
மாநில செய்திகள்

சென்னையில் 300 இடங்களில்…. மீட்புப் படையினர் தீவிரம்….!!!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்த பிறகு மழை குறைந்துள்ளது.

இதையடுத்து மீட்பு படையினர் நேற்று முதல் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று விடிய விடிய மழை நீரை அகற்றும் பணி நடந்துள்ளது. இந்த முறை சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறிய நிலையில், மழை தண்ணீரை அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் அகற்றுவது என்பது மாநகராட்சி ஊழியர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு குழுவினர் ஆகியோருக்கு பெரிய சவாலாக இருக்கிறது. தண்ணீரில் மூழ்கிய 500க்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்று 125 இடங்களில் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.

மீதமுள்ள 300 இடங்களில் மழை நீரை அகற்றும் பணியானது நடந்து வருகிறது. மேலும் சென்னையில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்புநிலை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சிறப்பு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பெய்த மழையின் காரணமாக இதுவரை 253 மரங்கள் வேரோடு சாய்ந்தது.

அவை உடனே அகற்றப்பட்டு விட்டன. மேலும் 302 குழந்தைகள் 853 பெண்கள் உட்பட 2,249 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் 48 படகுகள் மூலமாக மக்கள் மீட்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். புறநகர் பகுதிகளிலும் மீட்பு பணிகள் நடத்தப்பட்டது. மேலும் அந்தப் பகுதிகளின் தெருக்களில் அதிக தண்ணீர் தேங்கியுள்ளதை அகற்றும் பணிகளும் நடந்து வருகிறது.

Categories

Tech |