Categories
மாநில செய்திகள்

சென்னையில் “32 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்”….. சங்கர் ஜிவால் அதிரடி நடவடிக்கை….!!!!

சென்னையில் 32 காவல் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த விமர்சனத்திற்கு ஏற்றவாறு தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பாஜக பிரமுகர் பாலச்சந்திரன் சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறி விட்டார் என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வரும் நிலையில் சென்னையில் அதிரடியாக 32 சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ளார்.

மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர்களின் விவரம்:

பி.கண்ணன்-ராயப்பேட்டை சட்டம்-ஒழுங்கு, கமலக்கண்ணன்-தலைமைச்செயலக காலனி சட்டம்-ஒழுங்கு பிரிவு, விஜயகுமார்-கோடம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு, வேலு- வேப்பேரி சட்டம்-ஒழுங்கு, செல்லப்பா-பரங்கிமலை சட்டம்-ஒழுங்கு, ஜானகிராமன்- புளியந்தோப்பு சட்டம்-ஒழுங்கு, புஷ்பராஜ்-யானைக்கவுனி சட்டம்-ஒழுங்கு, கோபாலகுரு-அண்ணாநகர் சட்டம்-ஒழுங்கு பிரிவு, சரவணபிரபு-திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு பிரிவு ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரவீன் தானி-காசிமேடு மீன்பிடி துறைமுக சட்டம்-ஒழுங்கு பிரிவு, குமரன் நகர் சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு பொன்ராஜ், சூளைமேடு சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு பூபாலன், தரமணிக்கு பழனி, சேத்துப்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு வெற்றிசெல்வன், புழல் சட்டம்-ஒழுங்கிற்கு ஷோபா தேவி, வண்ணாரப்பேட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு தவமணி ஆகியோர் காவல் ஆய்வாளராகளாக பதவி ஏற்க உள்ளனர்.

மேலும் பாஜக பிரமுகர் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருந்த சிவசுப்ரமணியன் பணிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக புதிய காவல் ஆய்வாளராக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |