Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 35 இடங்களில்…. வருமான வரித்துறை அதிரடி சோதனை….!!!!!

சென்னையில், உள்ள 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் 2 நிதிநிறுவனங்கள் ரூபாய் 300 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டாத ரூபாய் 50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனையில் சென்னையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், நிதி நிறுவனம் நடத்துபவரின் ஹவாலா பணப் புழக்கம் இருப்பதாகவும் மற்றும் அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் வந்தன.

அந்தப் புகாரின் பேரில் சென்னையில் புரசைவாக்கம், சவுகார்பேட்டை, பாரிமுனை, வேப்பேரி போன்ற இடங்களில் நிதி நிறுவனங்களை நடத்தி வருபவர்களின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அதன் தொடர்புடையவர்களின் 35 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அவற்றில் வரிஏய்ப்புக்காண பல ஆவணங்கள் வருமானவரித் துறையினரிடம் சிக்கியது.

இதனைப்பற்றி சென்னையில் உள்ள வருமான வரித்துறை கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் இயங்கிவரும் 2 தனியார் நிதிநிறுவனங்களுக்குச் சொந்தமான 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 2 நிதி நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களிடம் கொடுத்துள்ள வரையறையைத் தாண்டி பெரும் வட்டி பணத்தின் மூலமாக சுமார் ரூபாய் 300 கோடி கணக்கில் காட்டப்படாத வருவாய் ஈட்டியுள்ளது தெரியவந்தது.

மேலும் நிதி நிறுவனங்களில் வங்கிக் கணக்குகளைத் தவிர வேறு பெயர்களிலும் வங்கிக் கணக்குகளை தொடங்கியுள்ளனர். அந்த கணக்கில் வாடிக்கையாளர்களை வட்டி செலுத்த வைப்பதும் தெரியவந்துள்ளது. அதனால் 2 நிதி நிறுவனங்களுக்கும் சொந்தமான 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூபாய் 9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

 

Categories

Tech |