Categories
மாநில செய்திகள்

சென்னையில் 4 முக்கிய ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் 4 முக்கிய ரயில்கள் தடை  செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் ரயில் ‌நிலையங்களில் மின்சார பராமரிப்பு மற்றும் போக்குவரத்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை ஆவடி-பட்டாபிராம் ரயில் நிலையங்களுக்கு இடையில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மார்ச் 25 முதல் 26 வரை புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மேலாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

  • திருவள்ளுவர்-ஆவடி இரவு 10.10 மணி (43838)
  • பட்டாபிராம் ராணுவ பகுதி-ஆவடி இரவு 10.30 மணி (438932)
  • வேளச்சேரி பட்டாபிராம் இரவு 10.30 மணி (43799)
  • மார்க்கெட்- திருவள்ளுவர் இரவு 11.15 மணி (43255)

இந்த ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார். எனவே இந்த நேரத்தில் பயணிகள் யாரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட வேண்டாம் எனவும், தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

Categories

Tech |