Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 400 காய்ச்சல் சிறப்பு முகாம்கள்…. மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் முன் களப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 400 காய்ச்சல் சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். இதன்படி சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரு வார்டுக்கு 2 காய்ச்சல் முகாம்கள் என 400 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

Categories

Tech |