சென்னையில் உள்ள CCTV கேமராக்களில் 6- இல் ஒன்று வேலை செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மொத்தமாக காவல் துறை சார்பாக 2500 கேமராக்களும், தனியார் மற்றும் அரசு இணைந்து 70,000 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 656 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் ஆறில் ஒரு கேமரா செயல்பாடின்றி இருக்கின்றன. சென்னை தெற்கு, கிழக்கு பகுதிகளில் அதிக அளவு கேமராக்கள் செயல்படவில்லை. நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாதது, குற்றங்களை அதிகரிக்கவும், குற்றவாளிகள் தப்பிக்கவுமே உதவும்.
இந்நிலையில் சென்னையில் எத்தனை சிசிடிவி கேமராக்கள் உள்ளன என்பதை கணக்கிட வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் 75 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை கூடுதலாக பொருத்தி சென்னை மாநகரில் உள்ள மொத்த சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை விரைவில் 1.50 லட்சமாக உயர்த்த வேண்டும் என சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.