சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் பயணிகளின் எண்ணிக்கை மெதுவாக குறைந்தது. அதனால் தினந்தோறும் 60 லிருந்து 70 வரையிலான விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. அந்த விமானங்களிலும் இரண்டாயிரத்தில் இருந்து 3 ஆயிரம் வரையிலான பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வந்தாலும், மூன்றாவது அலை ஆரம்பிக்கலாம் என்ற அச்சம்உள்ளன.
அதனால் பயணிகள் விமான பயணம் மிகவும் பாதுகாப்பானது என்று பலர் விமானங்களில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்கள். இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் கடந்த ஜூன் மாதங்களில் இருந்து பயணிகள் எண்ணிக்கை மற்றும் விமானங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 7 மாதங்களுக்கு பிறகு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ,கொல்கத்தா ,அகமதாபாத், கொச்சி தூத்துக்குடி, கோவை ஆகிய நகரங்களுக்கு இன்னும் கூடுதலான விமானங்கள் இயக்கப்படுகின்றது. கொரோனா தடுப்பூசி பற்றி மக்களிடையே நல்ல விழிப்புணர்வு காரணமாக பயணங்கள் அதிகமாகியுள்ளன. இப்போது மீண்டும் இயல்பு நிலைக்கு விமானப் போக்குவரத்து திரும்பியுள்ளது.
மேலும் டிசம்பர் மாதத்திற்குள் விமான சேவைகள் 300க்கும் அதிகமாக இயக்கப்படும். பன்னாட்டு விமான சேவை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் காரணமாக 10 க்கும் அதிகமான விமான போக்குவரத்து மட்டுமே உள்ளன. மத்திய அரசு தளர்வுகளை அறிவித்ததும், பன்னாட்டு விமான போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு மாறும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.