Categories
மாநில செய்திகள்

சென்னையில் 750 இடங்களில் மழைநீர் வெளியேற்றம்…. சென்னை மாநகராட்சி வெளிட்ட தகவல்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதில் சென்னையில் பெய்த கன மழையால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்தநிலையில் மக்கள் இயல்புநிலை மீண்டும் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை முறிந்து விழுந்த 579 மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 778 பகுதிகளில் 750 இடங்களில் தேங்கிய நின்ற மழைநீர் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள இடங்களில் மழை நீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் மொத்தமுள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதனைப்போலவே வடகிழக்கு பருவமழை முன்னிட்டு சென்னை நகரில் உள்ள வாகன போக்குவரத்தில் தற்போதைய நிலவரத்தை சென்னை போக்குவரத்து காவல் வெளியிட்டு உள்ளது. அதில் மழைநீர் வெள்ள பெருக்கு காரணமாக போக்குவரத்தின் மாற்றத்தின் படி, பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஜிஎஸ்டி சாலை வழியாக செல்லும் வாகனங்கள் ஜிஎஸ்டி அபிபுல்லா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |