சென்னையிலுள்ள 151 அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ்நிலையங்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னையில் இயங்கி வரும் அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ் நிலையங்களில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார்கள் வந்தது. அந்த புகாரின் பெயரில் அங்கு சோதனை மேற்கொள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆணையிட்டார். இதையடுத்து சென்னையில் தியாகராய நகர், வடபழனி, அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 151 அழகு நிலையங்களிலும், மசாஜ் நிலையங்களிலும் போலீசார் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா, பாலியல் மற்றும் சட்ட விரோத செயல்கள் ஏதும் நடைபெறுகிறதா என்று அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் காவல்துறை நடத்திய சோதனைகளில் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளன வா, யாரையாவது கைது செய்துள்ளார்களா என்ற விவரங்களை இதுவரை காவல் துறையினர் தெரிவிக்கவில்லை.