Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு…. குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேர் சிறையில் அடைப்பு….குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு…!!!

கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டம் மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலனியில் ஸ்ரீகாந்த் – அனுராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும் சஸ்வத் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் சுனந்தாவுக்கு திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அதன் பிறகு சஸ்வந்தும் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மே மாதம் ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தன்னுடைய மகளையும் மகனையும் பார்த்துவிட்டு சென்னைக்கு திரும்பினர். இவர்களை விமான நிலையத்திலிருந்து கார் டிரைவர் கிருஷ்ணா வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த ஸ்ரீகாந்தையும் அனுராதாவையும் கிருஷ்ணா மற்றும் அவருடைய நண்பர் ரவி ஆகிய இருவரும் சேர்ந்து கொடூரமான முறையில் கொலை செய்தனர்.

இதனையடுத்து நெமிலிசேரியில் உள்ள பண்ணை வீட்டில் 2 பேரின் உடலையும் புதைத்தனர். அதன்பிறகு  ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்த 1,000 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணா மற்றும் ரவி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் 2  பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கிருஷ்ணா மற்றும் ரவி ஆகியோர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த குற்ற பத்திரிகையானது சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து விரைவில் தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

Categories

Tech |