Categories
மாநில செய்திகள்

சென்னையை சரி செய்யுங்க…. ஸ்டாலின் அதிரடி உத்தரவு…. அமைச்சர் முக்கிய தகவல் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ வேலு, சென்னையை பொறுத்தவரையில் நெடுஞ்சாலைத் துறைக்கு நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிற சாலைகள் 258 கிலோமீட்டர் சாலைகள் தான் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிற மாநகரத்தில் 11.5 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளையும்,  30.71 கிலோமீட்டர் உள்ள வடிகால் பணிகளையும், 34 சிறு பாலங்கள் ஆகிய மூன்று பகுதிகளையும் இந்த ஆண்டிற்குள் சீரமைப்பு பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டிருக்கிறார்.

அதற்காக 263 கோடி ரூபாய் சென்னைக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவைகளெல்லாம் இந்த 6 மாத காலத்திற்குள் நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக விரைவாக செய்து முடிக்கின்ற பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். இந்த பணிகள் தாமதமாவதற்கு சில காரணங்கள் என்னவென்று சொன்னால் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களை இணைக்கின்ற  பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டிருக்கிறது. இந்த குடிநீர் குழாய்கள் போகின்ற பகுதிகளிலும் சரி, கழிவுநீர் குழாய்கள் சரி அதை அகற்றுகின்ற போது தான் இந்த நீர்வழி போக்குகளை நாங்கள் சிறப்பாக செய்யமுடியும்.

என்னுடைய அமைச்சர் அலுவலகத்தில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளோடு, மாநகராட்சியினுடைய பொறியாளர்கள், மேலும் ரயில்வே சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், மின்சாரத் துறை சம்பந்தப்பட்ட பொறியாளர்களை அழைத்து இருக்கிறேன். அவர்களையெல்லாம் அழைத்து ஒரு கூட்டு முயற்சியின் மூலமாக இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க திருப்புகழ் IAS தலைமையில் அமைக்கப்பட்ட குழு நெடுஞ்சாலைத் துறைக்கு செய்ய வேண்டிய அறிவுரைகளை பரிந்துரை செய்திருக்கிறார்கள். அதுபோன்று மாநகராட்சிக்கு வேண்டிய பணிகளை எப்படி செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துரைத்திருக்கிறார்கள்,

நீர் மேலாண்மை சார்ந்த அலுவலர்களுக்கு, பொறியாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்கள் சொன்னதன் அடிப்படையில் தான் நாங்கள் இந்த பணிகளை செய்துகொண்டு இருக்கிறோம். அவர்கள் என்னென்ன பரிந்துரை சொன்னார்களோ, அந்த பரிந்துரையை மேற்கொண்டு தான் முதலமைச்சர் எங்களுக்கு ஆணையிடுகிறார். அதன்படி தான் நாங்கள் பணிகள் செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |