சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் அதிக கனமழை பெய்யும் என்பதாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.அது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கு வடதமிழகம் பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை மிகவும் நெருங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 130 கிலோமீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னையில் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாலையில் வட சென்னை அருகே தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது. பலத்த காற்று வீசுவதால் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது