Categories
மாநில செய்திகள்

சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல்… தமிழகம் புதுச்சேரிக்கு, நாளை ரெட் அலர்ட்…!!!!

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக உருவாகி நேற்று இரவு 11.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இந்த மாண்டஸ் புயலானது நகரும் வேகம் மணிக்கு சுமார் 6 கிலோ மீட்டராக குறைந்திருக்கிறது. இந்நிலையில் காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கு 530 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 620 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

இதனையடுத்து மாண்டஸ் புயல் வருகிற 9-ம் தேதி நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற பகுதிகளில் நாளை அதிக கன மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு 10-ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |