வங்ககடலில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது சென்னைக்கு கிழக்கு-தென் கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கே 170 கிலோமீட்டர் தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை சென்னையை சுற்றி வடதமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரபிரதேச கடற்கரைகளை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் 27 கிலோ மீட்டரில் இருந்து 21 கிலோ மீட்டராக குறைந்துள்ளது.
Categories