Categories
மாநில செய்திகள்

சென்னையை மிரட்டும் கொரோனா…. அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

சென்னையில் புதிதாக 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னையில் 194 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் 294 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் முக கவசம் அணிந்து, பண்டிகை காலங்களில் உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று 610 ஆக இருந்த தொற்று இன்று 739 அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 758 ஆகவும், 614 பேர் டிஸ்டார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,02,588 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |