Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னைவாசிகளுக்கு செம சூப்பர் அறிவிப்பு…. இனி காத்திருக்க தேவையில்லை…. ஆன்லைன் சேவைகள் அறிமுகம்….!!!!

தமிழகத்தில் தற்போது அரசு சார்ந்த அனைத்து வேலைகளும் ஆன்லைன் மையமாகி விட்டது. அதிலும் குறிப்பாக அரசு போட்டி தேர்வுகளுக்கு பதிவு செய்வதற்கு பிறப்பு , இறப்பை பதிவு செய்தல், சமூகக் கூடங்கள் முன்பதிவு செய்தல் போன்ற பணிகள்  ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் RTI என்ற சட்டத்தின் கீழ், ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை அவர்களின் வீட்டு வாசலில், வழங்குவதற்கான சூப்பர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆன்லைனில் வழங்கக்கூடிய சுமார் 16 சேவைகள் மட்டும் முதல் கட்டமாக வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் சேவைகள் குறித்த பட்டியலை, ஜி.சி.சி அலுவலகங்களின் முன் ஒரு பலகையில் காட்டப்பட வேண்டும்.  இதனை தொடர்ந்து, இணையதளத்தில் புதுப்பிக்க வேண்டும்.

இதனை அடுத்து, இதில் நிர்ணயிக்கப்பட்ட நேரம், தகுதிக்கான அளவுகோல், கட்டணத் தொகை, விண்ணப்பங்களின் நடைமுறை மற்றும் விண்ணப்பத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை மற்றும் எந்த ஒரு சேவைக்கும் ஒப்புதல் பெற எதிர்பார்க்கப்படும் நேரம், அதிகாரிகளால் தாமதம் ஏற்பட்டால், தாமதத்திற்கான காரணம் போன்றவற்றை, தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இவ்வாறு வேளச்சேரி மேற்கு செயலாளர் அறிவுரையை வழங்கியுள்ளார்.

Categories

Tech |