சென்னை மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் கழிவு நீர் தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேர சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் அடைப்புகளை சரி செய்தல்,சுத்தம் செய்தல் மற்றும் அது தொடர்பான அனைத்து பணிகளுக்கும் புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கி வரும் அழைப்பு மையத் துக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொது இடங்களில் கழிவுநீர் அடைப்பு குறித்த புகார்களுக்கு 45674567, பாதாள சாக்கடையில் பாதுகாப்பு குறைபாடுகளுடன் பணி செய்தல் 14420 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.