இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள் தங்கும் வசதி உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று இரவு 12 மணியில் இருந்து ஜனவரி 1ம் தேதி அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.