Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கு…. கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்… இன்றே(ஜூலை 31) கடைசி நாள்…..!!!!

தமிழகத்தில் மகளிர், மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள சிறார்கள் அனைவருக்கும் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்தது. அதாவது இன்றே கடைசி நாளாகும். டோக்கனை பெற்றுக்கொண்டு 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர்சாதன வசதி இல்லாத சென்னை மாநகர போக்குவரத்து கழக அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

புதிதாக கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் டோக்கன்களைப் பெறுவதற்கு இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை நகல், வயது சான்று (ஆதார் அட்டை,ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்று, வாக்காளர் அட்டையில் ஏதேனும் ஒன்று) நகல், 2 வண்ண பாஸ்போர்ட் புகைப்படங்களை, அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களைச் சரிபார்க்கும் வகையில் அசலையும் கையில் வைத்திருக்க வேண்டும். புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அட்டையை மட்டும் கொண்டு வந்தால் போதுமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |