நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணியின் வீரர் சாம் கரன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 13வது நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி, சார்ஜா மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் நடப்பு தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டி20 உலக கோப்பையில் இருந்தும் விலகியுள்ளார்..
கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய ஆட்டத்தின் முடிவில் சுட்டிக்குழந்தை என்று அழைக்கப்படும் சாம் கரணுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது முதுகுத் தண்டு பகுதியில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது..
இதன் காரணமாகத்தான் அவர் விலகுவதாக சிஎஸ்கே அணி நிர்வாகமும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அறிவித்துள்ளது.. கடைக்குட்டி சிங்கம் சாம் கரன் விலகுவதால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.. தற்போது சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகள் பெற்று 2ஆவது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..
Sam Curran has been ruled out of the IPL 2021 and ICC Men’s T20 World Cup with a lower back injury.
Read More ➡️ https://t.co/g0QxFNbWls
— Chennai Super Kings (@ChennaiIPL) October 5, 2021
A special message from #KadaikuttySingam to the #Yellove family!
Read More: https://t.co/g0QxFMUkWS#WhistlePodu #Yellove 🦁💛 @CurranSM pic.twitter.com/PwvGQuzigU
— Chennai Super Kings (@ChennaiIPL) October 5, 2021