செங்கல்பட்டு மாவட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சதுரங்கப்பட்டினம் கடலோரத்திலிருக்கும் சென்னை அணுமின் நிலையத்திலுள்ள இரு அலகுகளிலும் தலா 22௦ மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்நிலையில் வருடங்களுக்கு ஒரு முறை இரு அலகுகளும் பராமரிப்பு பணிக்காக தனித்தனியாக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எந்திர கோளாறு காரணமாக முதல் அலகில் மின் உற்பத்தி நிறுத்தியுள்ளது.
இதனால் தற்போது இரண்டாவது அலகில் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி இரண்டாவது அலகும் மின் உற்பத்தியை பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தியுள்ளது. முழுமையான பணிகள் முடிந்த பிறகே முழு மின் உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.