Categories
மாநில செய்திகள்

சென்னை அண்ணாசாலையில் கலைஞருக்கு சிலை…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கடந்த காலத்தில் சென்னை அண்ணாசாலையில் தலைவர் கலைஞருக்கு முறையான அனுமதி பெற்று சிலை நிறுவப்பட்டது. ஆனால் அது எந்த காரணத்திற்காக அகற்றப்பட்டது என்பது குறித்து நான் சொல்ல தேவையில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை அண்ணாசாலையில் முன்பு இருந்த அதே இடத்தில் தலைவர் கலைஞருக்கு சிலை நிறுவ வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினார்.

ஆனால் பொது இடங்களில் சிலை அமைப்பிலுள்ள சட்ட சிக்கல்களை பற்றி அவரிடம் எடுத்துக் கூறினேன். இதனையடுத்து தொடர்ந்து வலியுறுத்தியதால் சென்னை அண்ணாசாலையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களுக்கு சிலை இருப்பதை போல முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு ஏதாவது ஒரு இடத்தில் சிலை அமைக்கப்படும். இது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து விரைந்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |