சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 5 முதல் 7 விமானங்கள் வரை தினமும் அந்தமானுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா தளமான அந்தமானுக்கு ஏராளமான பயணிகள் சென்று வந்தனர். இதனால் தினமும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். ஆனால் அந்தமானில் பகல் 3 மணியில் இருந்து தரைக்காற்று வீச தொடங்கிவிடும். இதனால் விமானங்கள் தரையில் இறங்கவும் புறப்படவும் முடியாது. எனவே அந்தமானில் பகலிலிருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் செயல்படும். இரவு நேரங்களில் செயல்படாது.
இந்நிலையில் அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து அந்தமானுக்கு செல்லும் விமானம் 4-ந் தேதி முதல் 3 நாட்கள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 5-ந் தேதி விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நாட்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தல் அல்லது டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்றி கொடுத்தல் ஆகிய முறைகளை செய்து கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.