Categories
தேசிய செய்திகள்

சென்னை – அந்தமான் விமான சேவை திடீர் ரத்து… காரணம் என்ன…? வெளியான அறிவிப்பு…!!!!!

சென்னை – அந்தமான் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய பகுதி தான் அந்தமான். யூனியன் பிரதேசமான அந்தமானுக்கு சென்னை போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் சென்னை – அந்தமான் இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்கள் 18-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் காரணமாக விமான சேவை 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக போர்ட் பிளேயர் விமான நிலையத்தின்  ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் போர்ட் பிளேரில் உள்ள வீர சவார்க்கர் விமான நிலையத்தில் ஒரே ஒரு ஓடு பாதை தளம் மட்டுமே அமைந்துள்ளது. இதன் காரணமாக  போர்ட் பிளேருக்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் அந்தமானிலிருந்து கொல்கத்தா, விசாகப்பட்டினம் சென்னை போன்ற பல்வேறு நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |