சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபம் அற நிலைய கட்டுப்பாட்டு துறைக்கு சென்றதால் சமாஜம் அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அயோத்யா மண்டபம் 1954ஆம் வருடம் கட்டப்பட்டதிலிருந்து ராம சமாஜம் அமைப்பு நிர்வகித்து வந்த நிலையில் அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றது. இதனிடையில் மண்டபத்திற்கு உள்ளே அனுமன் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டு, இந்து அறநிலையத்துறை தனதாக்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது நீதிபதி தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்து சமய நலத்துறை சார்பாக அரசு வழக்கறிஞர் யஷ்வந்த் விளக்கமளித்ததாவது, “மண்டபத்தில் ஆஞ்சநேயர் சிலை வைத்து அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்படுவதால் பொதுமக்கள் அதிகம் வழிபாடு செய்கின்றனர். இதனால் இந்து சமய அறநிலைத்துறை சட்டத்தின்படி சிலை வைத்து வழிபாடு செய்வதால் இந்த மண்டபம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என கூறினார். இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி ராமர் சமாஜம் அமைப்பு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தள்ளுபடி செய்துள்ளார்.