Categories
மாநில செய்திகள்

சென்னை ஆலையில் மீண்டும்…. போர்டு நிறுவனம் புதிய அறிவிப்பு…. தொழிலாளர்கள் மகிழ்ச்சி….!!!!

சென்னை ஆலையில் போர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் பெரிய கார் உற்பத்தி புதிய நிறுவனங்களில் ஒன்று போர்டு நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலும், சென்னையில் உள்ள மரமலை நகரிலும் தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு எக்கோ ஸ்போர்ட்ஸ் எண்டவர் பிகோ மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்பார்த்த அளவு விற்பனைகள் இல்லாத காரணத்தினால், கார் உற்பத்தியை நிறுத்தி விட்டு இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக கடந்த 9ஆம் தேதி போர்டு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பு ஃபோர்டு நிறுவனத்தை மட்டுமே நம்பியுள்ள 4ஆயிரம் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுக தொழிலாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் ஊழியர்களின் பணி பாதுகாப்பு குறித்தும் தொழிற்சங்கத்தின் முக்கியமான கோரிக்கைகளை ஏற்க போர்டு நிறுவனம் மறுத்துவிட்டன. அதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் ஒரு கேள்விக்குறியாக மாறியது. இந்தநிலையில் போர்டு நிறுவனம் புதிய தகவலை வெளியிட்டது. ஏற்கனவே பெற்றுள்ள ஆர்டர்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் இன்னும் பல மாதங்களுக்கு மறைமலைநகர் தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த செய்தி சற்று ஆறுதல் தருமாறு இருந்தாலும் தமிழ்நாடு அரசும் அரசியல் கட்சிகளும் எங்களது வாழ்வாதாரத்தை காப்பதற்காக தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |