சென்னை ஆவடி அருகே ரயில் தண்டவாளத்தில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, இவர் அரசு மருத்துவமனையில் 108 வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலக்ஷ்மி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மனைவி விஜயலக்ஷ்மி கணவரிடம் கோவித்து கொண்டு இந்து கல்லூரிக்கு சென்று அவரது தாய் வீட்டிற்கு செல்வதற்காக குழந்தைகளுடன் காத்திருந்திருக்கிறார். இதனை தொடர்ந்து மன வருத்தத்தில் இருந்த விஜயலக்ஷ்மி குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மறுபுறம் இவரை காணாத முத்துசாமி இரவு முழுவதும் தேடுதல் பணியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ரயில் தண்டவாளத்தில் மூன்று சடலங்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதையறிந்து ஆவடி ரயில்வே போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தபகுதியில் ரவுடிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் இது தற்கொலை தானா? இல்லை கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.