காஷ்மீரில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளில் பலர், ராஜினாமா செய்யவிருப்பதாக சோனியா ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்காக கட்சிகள் ஆயத்தப் பணிகளை செய்து கொண்டு வருகின்றனர். காங்கிரஸில் பிளவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மாநில முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், எம்எல்சி. கள் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் நேற்று தங்களுடைய பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும் இது பற்றிய தகவலை தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போன்றோருக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் நெருக்கமானவர்கள் என கூறப்படும் இவர்கள், மாநில கட்சித் தலைவர் குலாம் அகமது மிர் தங்களை ஒதுக்குவதால் இந்த முடிவை எடுத்துள்ளனர். விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டது கட்சியினரிடையே மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.