Categories
மாநில செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்களால்….. அரசுக்கு ரூ.‌ 59.82 லட்சம் இழப்பு…. வெளியான பகீர் தகவல்….!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செல்வராஜ் என்பவர் இருக்கிறார். இவர் எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் சம்பளத் தொகையில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொழில் வரி வசூலிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்காத பட்சத்தில் சம்பள தொகையிலிருந்து தொழில் வரி பிடித்தம் செய்யப்படவில்லை. அதோடு சம்பள கணக்கு அலுவலகத்தில் தொழில் வரி பிடித்தம் செய்யக்கூடாது என்று வற்புறுத்தி வருவதால் தான் உயர் நீதிமன்ற பணியாளர்களுக்கு தொழில் வரி பிடித்தம் செய்யப்படவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சம்பளத்திலிருந்து தொழில் வரி செலுத்தி வருகின்றனர்.

ஆனால் உயர் நீதிமன்ற ஊழியர்கள் மட்டும் தொழில் வரி செலுத்துவதில்லை. இதனால் ஒரு வருடத்திற்கு அரசுக்கு 59 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொழில் வரி செலுத்துவதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த விஷயம் கடந்த 24 வருடங்களாக நிலுவையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |