ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குளேயே முடங்கி கிடப்பதால் வெளியூர்க்ளுக்கு செல்வதில்லை. இதனால் ரயிலில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை எழும்பூர் – மதுரை சிறப்பு ரயில் ஜூன் 18, 20, 25, 27 ஆகிய தேதிகளிலும், மதுரை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜூன் 17, 19 ,24, 26 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி- குமரி சிறப்பு ரயில் ஜூன்20, 27 ஆகிய தேதிகளிலும், குமரி- புதுச்சேரிசிறப்பு ரயில் ஜூன் 21, 28 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.
Categories