சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு வாடகை செலுத்தாமல் இருந்ததால் இந்து சமய அறநிலைத்துறை அதற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் ஏகாம்பரேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கட்டிடம் தங்கசாலைத் தெருவில் உள்ளது. முதல் தளத்தில் 591 சதுர அடி பரப்பளவு கதவு எண் 177 கொண்ட கட்டிடத்தை ராகவலு என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. 213.25 சதுர அடி பரப்பளவு கதவு எண் 314 கொண்ட கட்டிடத்தை சிவாஜி ராவ் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டது. மேலும் 225.63 சதுர அடி பரப்பளவு கொண்ட கதவு எண் 314 கொண்ட கட்டிடத்தை ராம்தேவ் பட்டேல் என்பவருக்கும் வாடகைக்கு விடப்பட்டது.
இந்நிலையில் இவர்கள் முறைப்படி வாடகை செலுத்தவில்லை. இதனால் இணை கமிஷனர் உத்தரவுப்படி உதவி கமிஷனர் கவெனிதா, செயல் அலுவலர் நற்சோனை, மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை, வருவாய்த்துறை, ஊர் பொதுமக்கள் அனைவரது முன்னிலையில் இந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கபட்டது.
அதன்பின் அந்த கட்டிடத்தை கோவில் வசம் கொண்டு வந்துள்ளனர். இந்த கட்டிடத்தின் மதிப்பு ரூபாய் 4 கோடி. மேலும் இந்த கட்டிடத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இவ்வாறு இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.