தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை இந்திய விமான நிலைய ஆணையம் அமைத்துள்ளது. இந்த மையம் உள்நாட்டு வருகையின் நுழைவு வாயில்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.