Categories
தேசிய செய்திகள்

“சென்னை ஐஐடி” என பெயர் மாற்றும் திட்டம் இல்லை… மத்திய கல்வி அமைச்சர் பதில்…!!!

மெட்ராஸ் ஐஐடி எனும் பெயரை சென்னை ஐஐடி என மாற்றம் செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் பரிந்துரையின் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஐஐடி மெட்ராஸ் என் பெயரை சென்னை ஐஐடி என மாற்றும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் பரிந்துரையில் இல்லை என்று விளக்கம் அளித்தார். தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் இதனை அவர் தெரிவித்தா.ர் மேலும் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக மத்திய கல்வி அமைச்சர் இந்த பதில் அளித்தார்.

1996 இல் தமிழக அரசு மெட்ராஸ் என இருந்ததை “சென்னை” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் அதாவது ஐஐடி மெட்ராஸ் நிறுவனம் 1959 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதுவரை ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தை ஐஐடி சென்னை என மறுபெயர் இடுவதற்கான எந்த கோரிக்கையும் மத்திய அரசுக்கு வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |