சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவியை 2017 ஆம் ஆண்டு சக மாணவர்கள்கிங்ஷீக்தேவ் சர்மாவால் பாலியல் தொல்லை செய்தனர். மேலும் தன் நண்பர்களான சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ என்பவருடன் சேர்ந்து அந்த மாணவியை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார் .
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஐஐடி ஆராய்ச்சி மாணவர்களான கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, டாக்டர் ரவீந்திரன், எடமன பிரசாத், நாராயண் பத்ரா, சவுர்வ தத்தா, அய்யன் பட்டாசார்யா என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 10 மாதங்களாக வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் மாதர் சங்கத்தின் அழுத்தத்தினால் குற்றவாளிகளை கைது செய்ய சென்னை மயிலாப்பூர் போலீசார் மேற்கு வங்கத்திற்கு சென்றனர். ஆனால் கொல்கத்தாவை தலைமறைவாக இருந்த கிங்ஷுகு தேப்சர்மாவை போலீசார் கடந்த மாதம் கைது செய்தபோது அவர் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்ற நிலையில் அந்த உத்தரவை காண்பித்து விடுதலை பெற்றார், இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.