Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை ஐஐடி வளாகத்தில்… அடுத்தடுத்து 4 மான்கள் உயிரிழப்பு… அச்சம் வேண்டாம்… குழு அமைத்துள்ளோம்..!!

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அடுத்தடுத்து  4 மான்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நகரில் உள்ள ஐ.ஐ டி வளாகத்தில் கடந்த இரண்டு தினங்களில் 4 மான்கள் தொடர்ந்து உயிரிழந்தன. அதில் ஒரு மான் மட்டும் ஆந்த்ராக்ஸ் நோய்  தாக்கி உயிரிழந்தது  தெரியவந்தது. மேலும் மற்ற மூன்று மான்களுடைய  ரத்த மாதிரிகளை சேகரித்து  பரிசோதனைக்காக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும்  உயிரிழந்த மான்களின் உடல்களை வழிகாட்டு நெறிமுறைகளின்படி புதைக்கப்பட்ட நிலையில்  உடல் பரிசோதனை முடிவுக்காக ஐ.ஐ.டி நிர்வாகம் காத்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை ஐஐடி நிர்வாகம் சார்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வனவிலங்கு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும்  இந்த நோய்களுக்கான நெறிமுறைகளை சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு வழங்குகிறது. அதன்படி நாங்கள் அமைத்துள்ள  9 பேர் கொண்ட குழு 24 மணி நேரமும் வனவிலங்குகளை கண்காணித்து வருகின்றது.

ஐஐடி நிர்வாகம் சார்பில் ஆந்த்ராக்ஸ் தடுப்பூசியை விரைவில் செலுத்துபடும். ஐ.ஐ.டி வளாகத்துக்குள் ஆந்த்ராக்ஸ் நோய்த்தொற்று எப்படி பரவியது என்று ஆய்வு செய்து வருகிறோம். நாய்கள் மூலம் பரவி இருக்கலாம் என்று நினைக்கிறோம். இது அவசரநிலைஎன்றாலும்  பயப்படவேண்டாம். ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |