Categories
மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதி… வரும் 22ம் தேதி பதவியேற்ப்பு விழா …!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி வரும் 22ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அலகபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.

தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து நீதிபதி பண்டாரி பொறுப்பேற்கும் வரை மூத்த நீதிபதி துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக இருப்பார் எனவும், நீதிபதி பண்டாரி பொறுப்பேற்ற பின், அவர் தலைமை நீதிபதியாக நீடிப்பார் எனவும், அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி பண்டாரி வரும் 22ஆம் தேதி புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை பொறுப்பு நீதிபதியாக பதவி வகித்துள்ள முனீஸ்வர நாத் பண்டாரி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

Categories

Tech |