சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்டிடிஏ டென்னிஸ் ஸ்டேடியம் அமைந்துள்ளது. இங்கு சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி வருகிற 12-ஆம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இந்த தகுதி சுற்றி ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த 24 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த தகுதி போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 6 வீராங்கனைகள் வருகிற 12-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பங்கேற்பார்கள். இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சமர்தி மற்றும் ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவுடன் மோதினார். இந்த சுற்றில் சாய் சமர்தி 1-6, 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.