சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டியானது நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் வைத்து நடந்து வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டங்கள் நேற்றிரவு 7 மணிக்கு நடந்தது. முதல் அரை இறுதியில் அர்ஜெண்டினாவின் நாடியா போடோரோஸ்கா, செக் குடியரசைச் சேர்ந்த லிண்டாவுடன் மோதினார். இவற்றில் முதல் செட்டை இழந்த லிண்டா, அடுத்த இருசுற்றுகளை கைப்பற்றினார்.
இறுதியில் லிண்டா 5-7, 6-2 6-4 எனும் செட்கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டார். 2வது அரை இறுதியில் போலந்தின் மக்டாலினெட், இங்கிலாந்தின் கேத்தே சுவானுடன் மோதினார். முதல் செட்டில் 3 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில், காயம் காரணமாக சுவான் விலகிவிட்டார். இதன் காரணமாக லினெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைறும் இறுதிப்போட்டியில் லிண்டாவும், மக்டாலினெட்டும் மோதுகின்றனர். இறுதிப்போட்டியை நேரில் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பையும் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.