சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. மறைமலை நகர் அருகில் மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதால் ரயில் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் அதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் போகும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். சென்னையில் நேற்றிரவு விடியவிடிய பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. ஒருவேளை இதனால் கூட அந்த மின்வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.