தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ரயில் சேவைகளின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தண்டவாளங்களை மேம்படுத்துதல் மற்றும் சீரமைக்கும் பணிகளை செய்து வருகிறது. அதன்படி சென்னை கூடூர் இடையே ரயில் சேவையின் வேகம் அதிகரிக்கப்படுவதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது உள்ள 110 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 130 கிலோமீட்டர் வேகமாக அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி ஜி மல்யா, சென்னை கோட்டை மேலாளர் கணேஷ் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடன் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த ஓட்டத்தில் அதிகபட்சமாக 143 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் பயணம் செய்துள்ளது. சென்னை கூடூர் இடையே 124 கிலோமீட்டர் தூரத்தை 84 நிமிடங்களில் வெற்றிகரமாக கடந்துள்ளது. இதன் மூலமாக அதிவேக பயணத்தின் போது ரயில் தண்டவாளங்களின் உறுதி தன்மை மற்றும் பாதுகாப்பு பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவையை வேகப்படுத்துவதன் மூலமாக ஆந்திரா, டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களுக்கு வேகமாக பயணம் மேற்கொள்ள முடிகிறது. இதே போல் வருகிற 2024 – 2025 ஆம் வருடத்திற்குள் சென்னை- ரேணிகுண்டா, அரக்கோணம் – சோரனூர் சென்னை எழும்பூர் -திண்டுக்கல் இடையே விரைவில் அதிவேக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.