சிறுமி பாலியல் வழக்கில், 22 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த புகாரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலஷ்மி மற்றும் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சிறுமியின் தாயே பாலியல் தொழிலுக்கு அவரை ஈடுபடுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து சிறுமியின் தாய் ஷாகிதா பானு, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன், எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி ரயில்வே ஊழியர் காமேஸ்வரன் உட்பட 26 பேர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் 22 பேரை நவம்பர் 21 ஆம் தேதி கைது செய்தனர். அவர்களை பிப்.16 தேதி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் இந்த வழக்கு நீதிபதி முகமது ஃபரூக் முன்பு நடந்த்தப்பட்டது. அவர் இந்த வழக்கை விசாரித்து பிப்ரவரி 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். பெற்ற தாயே மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.