இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில் சிங்கங்களின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா 30 நொடிகள் ஓடும் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் காரில் சென்று கொண்டிருந்த போது இந்த வீடியோவை எடுத்துள்ளார். அப்போது மூன்று சிங்கங்கள் சாதாரணமாக மக்கள் செல்லும் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருக்கின்றன. இரவு நேரத்தில் வாகனத்தில் இருக்கும் வெளிச்சத்தை வைத்து இந்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது.
நல்லவேளையாக அந்த சிங்கங்கள் வாகனத்தில் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. இவர் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இப்படியான ஒரு அனுபவத்தை நான் அடைந்ததே இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து ஐபிஎல் ரசிகர் ஒருவர் “சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவின் அடையாளமாக சிங்கம் எவ்வளவு அழகாக வெளியே சுற்றி வருகிறது பாருங்கள்” என்று கூறியுள்ளார்.
Woah ! Best experience ever #sasangir #roadtrip pic.twitter.com/nCLwjEv1N1
— Ravindrasinh jadeja (@imjadeja) February 8, 2021