Categories
மாநில செய்திகள்

சென்னை டூ திருப்பதி ரயில் பயணிகளுக்கு….. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே முன்பதிவு வசதியுடன் கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்களுடன், முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ரயிலும் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதm நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்திய பொது முடக்கம், தடுப்பூசி, போன்ற நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து பல்வேறு வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா முதல் அலையின்போது ரத்து செய்யப்பட்ட சென்னை சென்ட்ரல்- திருப்பதி இடையேயா ன முன் பதிவு இல்லாத பயணிகள் ரயில் சேவை சில தினங்களுக்கு முன்பு வரை மீண்டும் தொடங்கப்படவே இல்லை. இதனால் சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சேர்ந்த ஏழுமலையான் பக்தர்கள் திருப்பதிக்கு பேருந்தில்லையே செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.

அதுமட்டுமில்லாமல் சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகள் உள்ள நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். ரயில் இருப்பதை போன்று படுக்க வசதியோ, கழிப்பறை வசதியோ பேருந்துகளில் இல்லாததே அவர்களை சிரமத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. பொதுமக்களின் இது போன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு சென்னை-திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் பொதுநல சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதன் பயனாக சென்னை சென்ட்ரல்- திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் போக்குவரத்து தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தினமும் காலை 9.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 1:40 மணி திருப்பதி சென்றடையும். எதிர் திசையில் பிற்பகல் 1.45க்கு திருப்பதியில் இருந்து புறப்பட்ட ரயில் மாலை 5.15க்கு சென்ட்ரல் வந்த அடையும். இதனையடுத்து சென்னை டூ திருப்பதி பேருந்து பயண கட்டணத்தை ஒப்பிடும் போது பயணிகள் ரயில் கட்டணம் மூன்றில் ஒரு பங்கு தான் என்பதாலும் பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், கடம்பத்தூர், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |