Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை டெஸ்ட் போட்டி… பிரபல இந்திய வீரர் விலகல்… OMG…!!!

சென்னையில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் விலகியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி முதலில் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற உள்ளது. அதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியுள்ளது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவர் நேற்று பயிற்சி மேற்கொண்டிருந்த போது இடது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் இந்த போட்டியில் இருந்து விலகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் ஷாபாஷ் நதீம் அணியில் இணைந்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு ஒரு வருடம் கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |